"மாஃபா" வுக்கு ஏன் சசிகலா இன்னும் வைக்கலை ஆப்பு...? ஏதாவது உள்குத்து இருக்குமோ??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறுபவர்களை எல்லாம் சசிகலா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி வருகிறார். ஆனால் 3 நாட்களாகியும் ஓபிஸ்க்கு ஆதரவு தெரிவித்த மாஃபா பாண்டியராஜனை அவர் கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என 2ஆக பிரிந்துள்ளது.

Sassikala not yet removed Mafoi Pandiyarajan from ADMK party

அதிமுகவில் இருந்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முன்னாள் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் ஓபிஎஸ்க்கு மாறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் அணிக்கு மாறும் நிர்வாகிகள் அனைவரையும் அடுத்த நிமிடமே சசிகலா கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.

ஆனால் சசிகலாவுக்கு தீவிர விசுவாசியாக இருந்து ஓபிஎஸை கண்ட மேனிக்கு வசைபாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திடீரென ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் வந்து சேர்ந்தார். ஆனால் சசிகலா இதுவரை அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை.

மாஃபா பாண்டியராஜன் ஓபிஎஸ் அணிக்கு வவந்த உடனேயே திமுகவைதான் சாடினார். ஓபிஎஸ்க்கு திமுக ஆதரவு அளிப்பதை தடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. திமுகவின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என்கிற ரீதியில்தான் அவர் பேசினார்.

இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதற்கும் இதற்கும் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்க மாஃபா பாண்டியராஜன் தான் பதில் சொல்ல வேண்டும்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sassikala not yet removed Mafoi Pandiyarajan from ADMK party. People raising doubt on this.
Please Wait while comments are loading...