தைரியமா இருங்க.. மீட்டு கொண்டு வந்துருவோம்.. நம்பிக்கையூட்டிய விஜயபாஸ்கர்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்!

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உள்ள சிறுவன் சுஜித்தை மீட்பதில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்படுகிறார் என்று நெட்டிசன்கள் டிவிட் செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நம்பிக்கையூட்டிய விஜயபாஸ்கர்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்!

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கி உள்ள சிறுவன் சுஜித்தை மீட்பதில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்படுகிறார் என்று நெட்டிசன்கள் டிவிட் செய்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். நேற்று முதல் நாள் மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது.

    சிறுவன் துளையில் விழுந்த அன்று இரவில் இருந்தே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்தில்தான் இருக்கிறார். தற்போது சம்பவ இடத்திற்கு வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் வந்துள்ளனர்.

    உடனே சென்றார்

    உடனே சென்றார்

    இந்த ஆழ்துளை கிணறு விபத்து குறித்து தகவல் தெரிந்ததும், அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை இரவு அங்கே சென்றார். இரவு முழுக்க அங்கேயேதான் அவர் இருந்தார். நேற்று மாலை வரை அவர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

    அலுவல் பணிகள்

    அலுவல் பணிகள்

    அதன்பின் நேற்று இரவு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, இன்று காலை மீண்டும் அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். மீட்பு குழுவுடன் சேர்ந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டார். அதேபோல் மீட்பு கருவிகளை விரைந்து கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைகளை செய்தார்.

    ஆறுதல் தெரிவித்தார்

    ஆறுதல் தெரிவித்தார்

    சிறுவன் சுர்ஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து விஜயபாஸ்கர் ஆறுதல் சொன்னார். நாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். எப்படியும் மீட்டு கொண்டு வந்துடுவோம். தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் சிறுவன் சுர்ஜித்தின் பெற்றோருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

    கருத்து வேறுபாடு

    இதையடுத்து அமைச்சர் விஜய பாஸ்கர் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்படுகிறார் என்று நெட்டிசன்கள் டிவிட் செய்துள்ளனர். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அமைச்சரின் பணி பாராட்டப்பட வேண்டியது, மதிக்கப்பட வேண்டியது, என்று இவர் கூறியுள்ளார்.

    நல்ல பணி

    அன்பு மந்திரி விஜய் பாஸ்கர் அவர்கள் செய்யும் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், என்று இவர் கூறியுள்ளார்.

    மீண்டு வர வேண்டும்

    கடமைய சின்சியரா செய்யுற எந்த அமைச்சராக இருந்தாலும் #சல்யூட் போடுறதுல தப்பு இல்ல பாராட்டுறதுலயும் தப்பு இல்ல...!!! அமைச்சர் #விஜய்பாஸ்கர் இவரோட எதார்த்த உதவி குணம் எல்லாருக்குமே வர வேண்டும்....!!!இவரோட உழைப்புக்காகவாது #சுர்ஜித் மீண்டு வர வேண்டும்.. என்று இவர் கூறியுள்ளார்.

    செம சார்

    அமைச்சர் விஜய் பாஸ்கர் பாராட்ட பட வேண்டியவர், தன் குழந்தையை போல பாவித்து இந்த பணியை களைதில் நின்று முடுக்கி விடுகிறார், என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+