கச்சத்தீவு வழக்கு: ஜெயலலிதா, கருணாநிதி மனுக்களை சேர்த்து விசாரிக்க முடிவு
சென்னை: கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி திமுக தலைவர் கருணாநிதி சார்பில் தாக்கல் செய்த மனுவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் கச்சத் தீவை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதே போன்றதொரு மனுவை கருணாநிதியும் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்கள் மீது இதுவரை தனித்தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் கருணாநிதி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வெங்கட்ரமணி, வி.ஜி. பிரகாசம் ஆகியோர் கச்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருக்கிறது என்றனர்.
இந்த வழக்குடன் கருணாநிதியின் வழக்கையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்ற நீதிபதிகள், இரண்டு வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications