விடிய விடிய கனமழை... தமிழகத்தில் பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, நாகை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை பெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதேபோல தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சி, நாகை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுறை விடப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைத்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விடுமுறை
தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. மீண்டும் கனமழை தொடர்வதால், புதுச்சேரியில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வுகள்
தீபாவளிக்குப் பின்னர் நீண்ட விடுமுறை விடப்பட்டு கடந்த வியாழக்கிழமைதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications