தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரவிய புகைப்படம்... 60-வயது முதியவர் கைது!
தேனி: தேனி மாவட்டம் தேவாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
தேவாரம் அருகே டி.தம்மிநாயக்கன்பட்டியில் முதியவர் ஒருவர் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளியான மூன்று படங்களில் ஒன்றில், 'நுாலகம், தம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி' என, சுவரில் எழுதப் பட்டிருந்தது. இதையடுத்து, போடி டி.எஸ்.பி. பிரபாகரன், தேவாரம் காவல் ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் ஆகியோர் அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் லட்சுமி (35) காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் சின்னச்சாமி (60) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்மி நாயக்கன்பட்டி முத்துகிருஷ்ணன் என்பவரின் 9 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கீழே விழுந்ததில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அங்குள்ள நூலகம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம், முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. தொழுநோயாளியான அவருக்கு திருமணம் ஆகவில்லை. தொழுநோயாளி என்று உறவினர்கள் ஒதுக்கியதால், ஊராட்சி அலுவலக வளாகத்தில் தங்கியிருந்தார். முதியவர் என்பதால், சிறுமிகளிடம் நெருங்கி பழகியதை யாரும் தவறாக நினைக்கவில்லை.
இதனிடையே, துக்க நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் தம்மிநாயக்கன்பட்டி வந்த மதுரை கல்லுாரி மாணவர்கள் சிலர், சின்னசாமி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications