கரூரில் பயங்கரம் - பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொலை.. காதலிக்க மறுத்ததால் கொடூர தாக்குதல்!
கரூர்: கரூரில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தன்னையும் குத்திக் கொண்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள ரெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகள் பாரதிபிரியா (14) அதே பகுதியில் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

இதே ஊரை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் (23) கட்டிட வேலை பார்த்து வருகிறார். பாரதிபிரியாவை மனோஜ் ஒருதலைபட்சமாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் இந்தக் காதலை பாரதிபிரியா ஏற்கவில்லை.
இது தொடர்பாக ஈஸ்வரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சின்னதாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மனோஜை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்ற பாரதிபிரியாவை வழிமறித்து கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார் மனோஜ். இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சில் பாரதிபிரியாவை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவி பாரதிபிரியா உயிரிழந்தார். இதனிடையே கத்தியால் குத்திய மனோஜ் தானும் வயிற்றில் கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து அவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications