காலையில் பள்ளி... மாலையில் பாலியல் தொழில்... சிறுமிகளை பலாத்காரம் செய்த போலீசார்
மதுரை: மதுரையில் 3 ஆண்டுகளாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டுள்ளதோடு 3 ஆண்டுகளாக சீரழித்த பட்டாலியன் போலீஸ்காரர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் எஸ்ஐ முதல் ஏடிஜிபி வரை போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கும் விவகாரம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரை சம்பவத்தில் போலீசாருக்கு தொடர்பிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில், கடந்த 2 நாட்களுக்கு முன் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிறுமியை வைத்து விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது. 16 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர் 9ம் வகுப்பு படித்து வருவதும், அவரை கட்டாயப்படுத்தி 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும், பட்டாலியன் போலீஸ்காரர் உள்ளிட்டோர் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெற்கு மகளிர் போலீசார், பழநி சிறப்பு காவல் படை பட்டாலியன் போலீஸ் பிரசன்னஜித், புரோக்கர்களான ஷகிலாபானு, செல்வி, முத்து இருளாயி, மீனாட்சி உள்பட 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் போலீசாரின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது, மற்றொரு சிறுமி பாலியல் விவகாரத்தில் தள்ளப்பட்டிருப்பதும், அதில் ஒரு போலீஸ்காருருக்கு தொடர்பிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புரோக்கர்களான 4 பெண்களும், சிறுமியின் தாயின் துணையோடு 13 வயதிலேயே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். முதலில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தங்கபாண்டி, அவரது அண்ணன் சுந்தரபாண்டி ஆகியோர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அரசு பஸ் நடத்துனர் பிராங்க்ளின் ஞானதாஸ் டேவிட், முத்துகணேசன் ஆகியோர் சிறுமியை சீரழித்துள்ளதாக கூறியுள்ளார் மதுரை காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ்,
சிறுமியின் வறுமையை பயன்படுத்தி, ஜெய்ந்த்புரத்தைச் சேர்ந்த சகிலாபானு, மேல அண்ணாத்தோப்பைச் சேர்ந்த செல்வி, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் முத்து இருளாயி, திருமங்கலம் மீனாட்சி ஆகிய 4 விபசார பெண் புரோக்கர்கள் அந்த மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்து உள்ளனர். அதன்பின் அவர்கள், அந்த மாணவியை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு லாட்ஜிற்கு அனுப்பி விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தங்கபாண்டி, அவரது அண்ணன் சுந்தரபாண்டி, பிராங்க்ளின் ஞானதாஸ் டேவிட், முத்துகணேசன் ஆகியோர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதன்பின் அவர்கள் அந்த மாணவியை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜில் பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். அப்போது தான் மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.
அந்த பெண் புரோக்கர்களுக்கு லாட்ஜ் மேலாளர் சேவியர், பிரபாகரன், சையதுஅலி. பிரசன்னஜித் ஆகியோர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து பெண் விபசார புரோக்கர்கள் 4 பேர் உள்பட அவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவர் அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவராம்.
கடந்த 3 ஆண்டுகளாக சிறுமியை காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இரவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பழநி பட்டாலியன் போலீசாக பணியாற்றி வரும் பிரசன்னஜித் ஆகியோரும் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் கூறியுள்ளார். இதன்பேரில், பிரசன்னஜித் உள்பட 12 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிவகாசி ஜெயலட்சுமி, சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு என போலீசாரின் புகழ்! பரவி வரும் நிலையில் மதுரை பள்ளி மாணவி பலாத்கார வழக்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications