நீலகிரி, தென்காசியில் அடித்து துவைக்கும் கனமழை.. பல்வேறு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த நான்கு நாட்களாக விடமால் மழை பெய்து வருகிறது.
அதிலும் நீலகிரியில் 200 மிமிக்கும் அதிகமாக மழை தினமும் பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிற்பகல் இரண்டு வரை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை நீலகிரிக்கு விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டு இருக்கிறார். உதகையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அங்கே தினமும் 220 மிமீ மழை வரை பெய்கிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவைக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது போக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய போவதாக என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதன்படி ஜூலை 10ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications