விருதுநகரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து பள்ளி மாணவி மரணம்
ராஜபாளையம்: விருதுநகரில் பள்ளியில் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி. அருகில் உள்ள அரசு பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்தார். இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று பள்ளியில் சத்துணவு சமையல் செய்து கொண்டிருக்கும் போது கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம் தனியார் ம்ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்து உயிரிழந்தது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் பேரில் சத்துணவு அமைப்பாளர் இந்திரா, சமையலர் திருக்கொடி, உதவியாளர் சுந்திரலெட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications