மாறுவேட போட்டி... காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் அசத்தல் !
காரைக்குடி பள்ளியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோட்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. சண்முகவேல் முருகன் அவர்கள் தலைமையேற்றார். தலைமையாசிரியர் திரு. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ஜெயகொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. அமல்ராஜ் கென்னடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார். கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. ரூபலா அவர்கள், இராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருமதி. சித்ரா அவர்கள் நடுவர்களாக பணியாற்றினர்.

மாணவர்கள் அதியமான் மற்றும் ஔவையார், தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர், இளவரசர் மற்றும் சின்ட்ரெல்லா, சிவன் மற்றும் பார்வதி, முருகன் மற்றும் பிள்ளையார், அப்பா மற்றும் மகன், ஆசிரியர் மற்றும் மாணவர் போன்ற கதாப்பாத்திரங்களில் ஜோடியாக பங்குபெற்றனர்.

பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். பட்டதாரி ஆசிரியர் திருமதி. மீனாட்சி அவர்கள் நிகழ்ச்சிக்களைதொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர்திருமதி. அனுராதா அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி ஜெயம் செய்திருந்தார்.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications