கிருஷ்ணகிரி அருகே பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவன் கார் மோதி பலி
இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கோடை விடுமுறையில் பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவன் கார் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் தருமபுரி மாவட்டம் இருமத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10வகுப்பு படித்துள்ளார். தற்பொழுது பள்ளியில் 11ம் வகுப்பிற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால் பள்ளிக்கு செல்ல புறப்பட்டு உள்ளார், பள்ளியின் பேருந்து சென்று விட்டதால் தனது உறவினர் சத்தியா என்பவருடன் பள்ளி பேருந்தை பிடிக்க இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அவதானப்பட்டியில் இருந்து காவேரிப்பட்டினம் நோக்கி சென்று கொண்டு இருந்த போது காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் இவர்களது இரு சக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவன் பிரவீன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் உடன் சென்ற சத்தியா என்பவர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்து இருந்தும் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அப்பள்ளியின் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications