காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து.. கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு !
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் புவனேஸ்வரி(15). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (18) என்ற கல்லூரி மாணவர், புவனேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை அந்த மாணவியை நவீன்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் நவீன்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மாணவியை உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications