ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் செய்ற காரியமா இது.. கன்னியாகுமரியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!
Recommended Video

கன்னியாகுமரி: ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு, படிக்கிற பிள்ளைகள் செய்ற காரியமா இது?
கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதுமே பரபரப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி குழித்துறை. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் சொல்லவே தேவையில்லை. எப்பவுமே பிசியான இடம்தான். சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகள் இந்த பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிதான் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வழக்கமாக செல்வர்.

தகாத வார்த்தைகள்
இப்படித்தான் சம்பவத்தன்றும், பள்ளி மாணவர்கள் சத்தமாக பேசி கொண்டு பஸ் ஸ்டாண்ட் சென்று கொண்டிருந்தனர். பின்னர் திடீரென மாணவர்கள் சாலையில் நடந்து சென்றவர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

விரட்டி சென்று தாக்குதல்
இதனை கவனித்த இளைஞர் ஒருவர், மாணவர்களிடம் சென்று இப்படித்தான் வரம்பு மீறி பேசுவதா என கேட்டார். அப்போதுதான் இளைஞருக்கு தெரியவந்தது யூனிபார்ம் அணிந்த அந்த பள்ளி மாணவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். அத்துடன் அந்த இளைஞரை விரட்டி சென்று மாணவ கும்பல் தாக்கவும் தொடங்கிவிட்டனர்.

பைக்கில் தப்பினர்
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளைஞரோ அருகில் இருந்த ஒரு பேக்கரிக்குள் ஓடி நுழைந்து கொண்டார். ஆனால் போதை மாணவர்கள் அப்போதும் விடவில்லை. கடைக்குள் நுழைந்து இளைஞரை சரமாரியாக அடித்தனர். இதனை கண்ட பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மாணவர்கள் அனைவரும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

விசாரணை ஆரம்பம்
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. பள்ளி யூனிபார்ம், மாணவர்களின் உருவம், மற்றும் அவர்கள் தப்பித்து சென்ற பைக் எண் போன்றவற்றினை வைத்து களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒழிக்கவே முடியாதா?
எவ்வளவுதான் முட்டி மோதி கதறினாலும் தமிழகத்தில் தடுத்து நிறுத்தவே முடியாத டாஸ்மாக்கை நினைத்து ஆத்திரப்படுவதா? படிக்கிற ஸ்கூல் பிள்ளைகள் இந்த வயதிலேயே இப்படி கண் எதிரே குடிச்சி குட்டிச்சுவரா போவதை நினைச்சு கவலைப்படுவதா? எதுவுமே புரியல!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications