எங்கள் புத்தகங்கள், சீருடைகள் தீயில் கருகுகின்றன.. கோவை ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு
புத்தகங்கள் கருகுவதாக மாணவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: மாணவர்களின் புத்தகங்கள் , சீருடைகளை சமூகவிரோதிகள் சிலர் எரித்து விடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள, தெற்கு துவக்க பள்ளி செயல்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் , இப்பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயில், மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் பொருட்கள் கருகின. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சூலூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று சீருடைகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்ட சீருடைகள் கருகி நாசமாகின. குறிப்பாக விடுமுறை தினங்களில் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறுவதாகவும், சமூக விரோதிகளின் கைவிரிசை தான் இந்த தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் எனவும், இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க கோரி அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனால், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், பள்ளிக்கு காவலாளியை நியமிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். தீ விபத்தின் காரணமாக தங்களது புத்தகங்கள் எறிந்து விட்டதால் படிக்க முடியாத சூழலில் இருப்பதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications