பெஷாவர் தாக்குதல்.. மெழுகுவர்த்தி மனித சங்கிலி அமைத்து சென்னை பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி!
சென்னை: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் மற்றும் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை வேலம்மாள் பள்ளியில் மாணவ, மாணவியர் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி அமைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டனர். இதில் 132 பேர் 16 வயதுக்குட்பட்ட பள்ளிப் பிள்ளைகள்.

மிகக் கொடூரமான இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மட்டுமல்ல உலக நாடுகளும் கூட அதிர்ந்து போயின. இந்தியாவிலும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்களில், பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் இன்று சென்னை வேலம்மாள் பள்ளியில் மாணவ, மாணவியர் இணைந்து மெழுகுவர்த்திகளை ஏந்தியும், மனிதச் சங்கிலி போல நின்றும் அஞ்சலி செலுத்தியது உருக்கமாக அமைந்தது.
மேலும் இந்த பெரும் துயரமான தருணத்தில் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று எழுதி அதில் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டு இரங்கல்களைத் தெரிவித்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications