நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்த பாதிரியாருடன் 'எஸ்' ஆன ஆசிரியை..!
கன்னியாகுமரி: திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவர் முதுகலை பட்டதாரி. வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பாதிரியார் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலு்ம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது காலபோக்கில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் பிலமினோவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஓட்டல் மேலாளராக இருக்கும் நித்திரவிளையை சேர்ந்த ஒருவரை பிலோமினாவை பேசி முடித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சியர்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை பாதிரியார் பீட்டர் தான் நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் பிலோமினா மார்த்தாண்டம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். மாலை பிலோமினாவின் தாயை பீட்டர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்கள் மகள் பிலோமினாவை நீங்கள் தேட வேண்டாம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து ஊரை விட்டு செல்கிறோம் என பீட்டர் கூறி விட்டு இணைப்பு துண்டித்து விட்டார். இதனால் பதறி போன பிலோமினாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொள்ள பலவழிகளில் முயன்றனர். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதுகுறித்து பிலோமினாவின் தாயார் களியாக்கவிளை போலீசார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயித்த ஆசிரியை பாதிரியாருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications