சென்னை ராயபுரத்தில் தனியார் பள்ளி வேனில் தீவிபத்து – உயிர்தப்பிய 15 குழந்தைகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டையே உலுக்கிய கும்பகோணம் தீவிபத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள இந்த நாளில் சென்னையில் ஒரு பெரும் அசம்பாவிதத்திலிருந்து 15 பள்ளிக் குழந்தைகள் தப்பியுள்ளனர்.
சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் வேன் ராயபுரம், தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேனை ராயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ஓட்டினார். வேன் எம்.சி சாலை வழியாக ராயபுரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது வேன் திடீரென தீப்பிடித்தது. உடனே டிரைவர் வேனை நிறுத்தி குழந்தைகளை இறக்கி விட்டார்.
பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வேறு வேன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இத்திடீர் தீவிபத்து குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications