வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணியினர்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது. வரலாறு காணாத அளவில் சென்னையில் பெய்த வெளுத்து வாங்கிய கனமழைக்கு பெரும்பாலான மக்கள் மிகக் கடுமையைாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை நிவாரணங்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தமிழக அரசு் மற்றும் பிற அரசியல் கட்சிகள் உணவு பொருட்கள், போர்வை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட வடசென்னை மாவட்டம் திருவிக நகர் தொகுதி தாசாமக்கானில், மழைநீரால் உடைமைகளை இழந்த பெண்களுக்கு வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ மகளிரணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஷாகிரா பானு தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கு தேவையான சுகாதாரப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகியன நிவாரணப் பொருட்களாக வழங்கப்பட்டன.

எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அமீர் ஹம்சா மற்றும் சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜா முகம்மது ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணியை சேர்ந்த ஜன்னத்துல் பிர்தவ்ஸ், மசின்பீ, ஷாபியா, ஜனினா மற்றும் ரஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டு 400 க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications