காங். மேலிடத்துடன் பேசிவிட்டு மீண்டும் கருணாநிதியை சந்திப்பார் குலாம்நபி ஆசாத்: மு.க. ஸ்டாலின்
சென்னை: தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் பேசிவிட்டு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்திப்பார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்து தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் கருத்துகளை தெரிவித்தார்கள். கருணாநிதியும் தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினார்.

இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடத்துடன் இதுகுறித்து பேசிவிட்டு மீண்டும் அவர் கருணாநிதியை சந்திப்பார் என்றார்.
அப்போது திமுக அணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என குலாம் நபி கூறியுள்ளாரே என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியா, அவர் எந்த சோர்ஸில் கூறினாரோ தெரியவில்லை. அப்படி கட்சிகள் வந்தால் செய்தியாளர்களை கூட்டி தெரிவிப்போம் என்றார் ஸ்டாலின்.
கடந்த முறையை விட இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுமா என செய்தியாளர் ஒருவர் கேட்க, அதை அவர்களிடம் தான் சொல்ல முடியும். உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லையே என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications