பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடுகிறது!
தூத்துக்குடி கலவரம் உச்சமடைந்து இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: தூத்துக்குடி கலவரம் உச்சமடைந்து இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை மே 29ல் கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைப்பார். இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பேருந்து விலை உயர்வு பிரச்சனை, நீட் பிரச்சனை, காவிரி பிரச்சனை என நிறைய விஷயங்கள் புயலை கிளப்பி இருப்பதால் இந்த கூட்டத்தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முக்கியமாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு பெரிய அளவில் பிரச்சனையை கிளப்ப இருக்கிறது.
என்ன மாதிரியான விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் இன்று கூட்டம் கூட்டி விவாதிக்க இருந்தது. ஆனால் தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. அவர் அவையில் இருந்து வெளியே வந்த பின் சட்டசபையில் உள்ள முதல்வர் அறைக்கு வெளியே போராட்டம் செய்தனர். இதையடுத்து போலீஸ் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தது.
மே 29ம் தேதி இந்த கூட்டம் தொடங்க உள்ளது. ஜூலை 9ம் தேதிவரை சட்டசபை கூட்டம் நடக்கிறது. சட்டசபை அலுவல் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications