அரசு ஊழியர்களின் ஆதரவையும் அள்ளும் ஓபிஎஸ்.. தலைமைச் செயலகம் "தல" பக்கம்!
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று நேரில் சந்தித்தனர்.
சென்னை: தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் இன்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் தலைமை செயலகம் செல்லவில்லை.

இதனிடையே, மெரினா கடற்கரையில் ஓபிஎஸ் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்ற பேட்டியை அளித்து தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன் பிறகு அரசியலில் பல்வேறு விதமான மாற்றங்கள், பரபரப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் ஓபிஎஸ் தலைமைச் செயலகம் சென்றார்.
அப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்ததாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதன் மூலம் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அரசு ஊழியர்களிடமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications