முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல்.. போலீஸ் குவிப்பு
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் போடிநாயக்கனூர் அலுவலகத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக செய்தி பரவியைதத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவரது அலுவலகம் சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று முதல் அங்கு பாதுகாப்புக்குப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலரைப் பிடித்தும் போலீஸார் விசாரித்துள்ளனர். போடி முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் நடந்து விடாத வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலும் தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான பெரும் புரட்சி நடந்து முடிந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக செய்தி கிளம்பியது காவல்துறையை டென்ஷனாக்கி விட்டது.












Click it and Unblock the Notifications