தூத்துக்குடியில் 'ஆபரேசன் சாகர் கவாச்': டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் 'சிக்கினர்'
தூத்துக்குடி: தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆபரேசன் சாகர் கவாச்சில் டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து கடல் வழி பாதுகாப்பை இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதற்காக ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் ரக்சத், ஆபரேசன் பேரிகார்டு என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பை ஓத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நீ்ண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு இந்த ஒத்திகை தொடங்கியது. இன்று 29ம் தேதி மாலை 6 மணி வரை இந்த ஓத்திகை நடக்கிறது. இதில் முதல்கட்டமாக சென்னையில் இரு்ந்து குமரி வரை 13 கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்ட்டது. கடலோர காவல்படை, மரைன் போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர வழியாக செல்லும் ரோடுகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி வான்தீவு பகுதியில் மரைன் போலீசார், கடலோர காவல்படையினர் ஓரு படகில் ரோந்து வந்தனர். அப்போது அந்த வழியாக ஓரு படகில் வந்த 5 பேர் வேறு வழியாக தப்பி ஊடுருவ முயன்றனர். அவர்களை துரத்தி போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் பழைய துறைமுகத்தில் இருந்து ஓரு படகில் தப்பி ஊடுருவ முயன்ற 7 பேரையும் போலீசார் மடக்கினர். அவர்கள் டம்மியாக அனுப்பி வைக்கப்பட்ட தீவிரவாதிகள் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து டம்மி துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதில் தமிழ்நாடு கமண்டோ படையை சேர்ந்த நான்கு பேர், தமிழ்நாடு கடற்படையை சேர்ந்த மூன்று பேர், தமிழ்நாடு காவல்படையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேர் ஓத்திகையில் தீவிரவாதிகளாக இருந்தனர். திறமையாக செயல்பட்டு மடக்கப்பட்ட அவர்கள், தங்களை தப்ப விடாமல் பிடித்ததற்காக மரைன் போலீசாரையும், கடலோர காவல் படையினரையும் பாராட்டினர். இந்த ஓத்திகை இன்று மாலை வரை நடக்கிறது. இதி்ல் மாலை தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாபபு ஓத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும் படியாக வந்த 5 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் டம்மி தீவிரவாதிகள் என தெரிந்தது. அவர்களிடம் இருந்தும் டம்மி துப்பாக்கி, வெடிகுண்டுகள் கைப்பற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications