தேச துரோக வழக்கில் தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் - வைகோ
தேச துரோக வழக்கில் தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சியோடு ஏற்று சிறை செல்வேன் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தேச துரோக வழக்கில் தண்டனை கிடைத்தால் அதனை ஏற்று சிறை செல்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எதையும் மறுக்க மாட்டேன், ஜாமீனிலும் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக குற்றச்சாட்டில் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ 15நாள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவரை மீண்டும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தகத்தை வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது அப்போதய திமுக அரசு தேச விரோத வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

தேச துரோக வழக்கு
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 3ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். அப்போது அவர் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

வைகோவிற்கு சிறை
வைகோவை ஜாமீனில் செல்லும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார்.

ஏப். 27 வரை நீட்டிப்பு
புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது அதனால், இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், வைகோவை வருகிற 27ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சிறை சென்றது ஏன்?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்தை ஆண்டது. இந்த இரு கட்சிகளும், லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதை மக்களுக்கு நினைவுப்படுத்தியதால் இந்த வழக்கில் நான் சிறை சென்றேன் என்றார்.

தண்டனையை ஏற்பேன்
இந்த தேச விரோத வழக்கில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்க மாட்டேன். நான் என்ன பேசினேனோ அதை அப்படியே ஒப்புக்கொள்வேன். இதனால் எனக்கு இந்த தேச துரோக வழக்கில் சிறை தண்டனை கிடைத்தாலும், அதை தயங்காமல் ஏற்பேன். இதை நான் எதையும் மறுக்கப் போவதில்லை என்று கூறிய அவர் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்றார்.

மோடி மீது குற்றச்சாட்டு
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடி வருவதாக கூறினார். அவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்று கேட்டார். மேலும் பேசிய அவர், தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி யானைப்பசிக்கு சோளப்பொறி என்றும் கூறினார்.

நடுநிலை வகிக்கிறோம்
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பிரச்சினைக்காக தி.மு.க. அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, வருகிற 25ந் தேதி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளது. ம.தி.மு.க.வை பொருத்தவரை இந்த போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. நடுநிலை வகிக்கின்றோம் என்று கூறினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் வைகோ மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications