மேல இருக்கிறவன் என்றால் அது எம்ஜிஆர், ஜெ.வின் ஆன்மாக்கள் - செல்லூர் ராஜூ அடடே விளக்கம்

மேல இருக்கிறவன் பாத்துக்குவான் என்றால் அது ஜெயலலிதா எம்ஜிஆரின் ஆன்மாக்களை கூறினோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களுக்கு எல்லாமே ஜெயலலிதா, எம்ஜிஆர்தான். மேல இருந்து அவர்களின் ஆன்மாதான் எங்களை வழிநடத்தி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை... எல்லாத்தையும் மேல இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி . ட்ரம்ப்பே வந்தாலும் பிரச்சினையில்லை எல்லாத்தையும் மோடி பார்த்துக்கொள்வார் என்றார்.

அவர் சொன்னது போலவே, இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்த மறுநாளே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாஜகதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரட்டை இலை

இரட்டை இலை

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ, எங்களுக்கு எல்லாமே எம்ஜிஆர், ஜெயலலிதாதான் என்று கூறினார். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்று கூறினால் அவர்களின் ஆன்மாதான் பார்த்துக்கொள்ளும் என்று ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜி

ராஜேந்திரபாலாஜி

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்னதை வைத்து யாரும் தவறாக பேச வேண்டாம். பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்றால் அவர்தான் இரட்டை இலையை பெற்றுக்கொடுத்தார் என்று கூறக்கூடாது. எங்களுக்கு இருந்த பெரும்பான்மை ஆதரவை வைத்தே இரட்டை இலை சின்னமும், கட்சியையும் பெற்றுக் கொடுத்தது.

எங்க எதிரி திமுகவே

எங்க எதிரி திமுகவே

ஆர்.கே. நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகதான் எங்களுக்கு எதிரி. ஆர்.கே. நகர் தொகுதியில் எங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். தினகரன் போட்டியிட்டாலும் அவரால் எங்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பே இல்லை. மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள். பிரிவதும், பின்னர் இணைவதும் சகஜம்தான்.

பணப்பட்டுவாடா புகார்

பணப்பட்டுவாடா புகார்

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்தோம் என்பதெல்லாம் பொய்யான பிரச்சாரம். எங்கள் பெயர்களை டைப் செய்து, எழுதி வைத்துள்ளனர். காகிதத்தில் எழுதியது எல்லாம் ஆவணங்களாக கூற முடியுமா? என்றும் கேட்டார் செல்லூர் ராஜூ. என்னமோ போடா மாதவா... பேட்டியை கேட்ட எங்களுக்குத்தான் தலை சுத்துது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+