2021ல் திமுக ஜெயிக்க நான் தான் காரணம்..அதிமுக ஓட்டை பிரிச்சதே நாம் தமிழர் தான்! சீமான் பேச்சால் ஷாக்
செங்கல்பட்டு: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு காரணமே நான் தான் எனவும், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வாக்குகளை நாம் தமிழர் பிரித்ததால் திமுக வெற்றி பெற்றது எனவும், பல தொகுதிகளில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 15,000 வாக்குகள் பெற்றதாக கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி பஞ்சமி நில மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சீமான்," இன்று ஏழையாக இருக்கும் சீமான் நாளை பணக்காரனாகலாம். அன்றாடங்காட்சியாக இருக்கும் ஒருவன் நாளை அம்பானி அதானியாக ஆகலாம்.இதனால் பொருளாதார அளவு மாறிவிடும். ஆனால் சாதியை இழிவு ஏற்றத்தாழ்வு மாறுவதில்லை.
தெருவிலே நடக்கக் கூடாது, பள்ளி படிக்கக் கூடாது, குளத்தில் இறங்க கடாது என ஒடுக்குமுறை அடுக்கு முறை தீண்டாமை இருப்பது நான் ஏழையாக இருப்பதல்ல எளிய சாதி, தாழ்ந்த சாதி தீண்டத்தகாதவன் என்பதற்காக என்று பேசியுள்ளார். இந்த நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த், தாழ்த்தப்பட்ட மகன், இந்த நாட்டின் முதல் குடிமகள் கோவிலுக்குள் சென்று இறைவனை வழிபட முடியவில்லை. மரத்தின் அடியில் யாதும் வளர்த்து குடும்பத்தோடும் சாமிக்கு விட்டு செல்கின்றனர். இதுதான் இந்நாட்டின் நிலைமை.
ஏழைப் பணக்காரன் என்பதற்காக இந்த தீண்டாமை இழிவு வரவில்லை தாழ்ந்த சாதி இழிமகன் என்பதனால் திடமை வந்துள்ளது. பிறப்பிலே கற்பித்த பேதம் பாகுபாடு என்றனர். இதை தகர்ப்பதற்கு சமநிலை படைப்பதற்கு உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லாமல், எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் இதுதான் முன்னோர்களின் முன்வைத்த தத்துவ கோட்பாடு.
இதற்கு ஒரே வாய்ப்பு குடி வரி கணக்கெடுப்பு. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் நாட்டில் பிரச்சனை ஏதும் உருவாகாது. திராவிட ஆட்சியாளர்கள் யாரு என்னவென்று தெரியாமல் உனக்கு எனக்கு என பங்கு போட்டு கொடுப்பார்கள். என்னுடைய நிலத்தில் வேளாண் செய்வது நான் ஆனால் சந்தையில் கூறு கட்டி விற்பவர் வியாபாரி திமுக. திமுக நீ இருந்த இடமே என் மக்கள் போட்ட பிச்சை. மூன்று விழுக்காடு, நான்கு விழுக்காடு அல்ல மொத்த விழுக்காடும் என்னுடையது.
பறையர் எவ்வளவு, படையாட்சியர், தேவர் முக்குலத்தோர், கள்ளவர், மறவர், உடையார், கோணவர், வன்னா உள்ளிட்ட அனைத்து தமிழ் சாதிப்பெயர்களை கூறி அன்னத்தையும் என்னப்பா கணக்கெடுக்க கூறியுள்ளனர்.
தண்ணி பஞ்சம் உணவு பஞ்சம் எல்லாம் பஞ்சம் இருக்கும் ஆனால் சாதி பஞ்சம் மட்டும் ஓயலை. கள்ளருக்கு ஒரு அமைச்சர், மறவருக்கு ஒரு அமைச்சர் கொடுத்து விட்டு வெளியே வந்து சனாதனத்தை ஒழிப்போம் என்கின்றனர்.
அதுக்கு தான் உன்னை ஒழிக்க போராடுகிறோம். இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் ரெண்டு மூணு அமைச்சர்களை கொடுத்து பிச்சை இடம் கொடுத்துள்ளனர். நான் எடுத்துக்கிட்டு மிச்ச இடம் உனக்கு கொடுத்து இருக்கணும். நாட்டிலே இரண்டாவது தாய்குடி நான். முதல் தாய்க்குடி குறவன் கல் தோன்றி மண் தன்ற காலத்தே வான் என்று முன் தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி. ஆதி தாய் குடி தமிழ் குடி குறவர்குடி.
இரண்டாவது தாய்க்குடி இந்த நாட்டில் பெற்றுள்ளது இரண்டே அமைச்சர். ஆனால் ஐயா ஸ்டாலின் வீட்டிலே இரண்டு அமைச்சர்கள். ஒன்று மிக உயர்ந்த பதவி முதலமைச்சர். இரண்டாவது பதவி துணை முதலமைச்சர். அவங்க அப்பா இருக்கும் போது ஐயா கருணாநிதி அவர்கள் முதலமைச்சர், இரண்டாவது துணை முதலமைச்சர் இரண்டும் அப்பா மகன் பதவி. பிறப்பினாலேயே ஒருவர் இந்த இடத்தில், இந்த நிலத்தில், இந்த சாதியில் பிறந்து விட்டதானலே அவனுக்கு ஒரு உயர்ந்த பதவியும், இடமும் கிடைக்குமானால் அதுதான் சனாதனம்.
ஒரு தகுதியும் இல்லாமல் போனாலும் இவருக்கு மகனாக பிறந்தநாலே அவனுக்கு உயர்பதவி கிடைத்து விடுமானால் அது கேடுகெட்ட கேவல சனாதனம். அதை ஒழிக்க தான் சாதிவாரி கணக்கெடு போராடி வருகின்றனர். திருமாவளவன் கூறியது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பாமக கேட்டது 20 விழுக்காடு, அனாலி அவர்கள் அறிவித்தது 10.5 விழுக்காடு அதை வாழ்க்கை போட்டு நிறுத்திட்டார்கள்.
நாம் வந்தபிறகு எல்லாம் சரியாகும். வன்னியர், தேவர், கோனார் எல்லாரும் எண்ணிட்டு அவர்களுக்கு தேவையான இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும். கொடுத்து விடு.
அப்படி கொடுத்தால் எங்களுக்குள் எந்த போட்டியும் வராது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். இது மக்களுக்கு தெரிந்துவிட்டால், கிளர்ச்சி எழுந்து விடும் புரட்சி நடந்து விடும். இதனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு திராவிடர்கள் எடுக்க மாட்டார்கள். தம்பி திருமாவளவனை கேட்டால் சாதி வரி கணக்கெடுப்பு என்பது எங்களால் முடியாது அது ஒன்றிய அரசு தான் இருக்க வேண்டும் என்று சொல்வார்.
சாதிவாரியாக கணக்கெடுக்க உங்களால் முடியாது ஆனால் வீடு வாரியாக ஓட்டு எவ்வளவு என எண்ணி ஓட்டுக்கு நோட்டு கொடுக்கிறது மட்டும் எப்படி முடியுது. ஒரு வீட்டுக்கு எத்தனை ஓட்டு இருக்கு என்று சரியாக எண்ணி இந்த ஓட்டுக்கு நோட்டு கொடுக்கறதுக்கு உன்னால முடியுது சரியாக சாதிவாரி கணக்கெடுக்க முடியாதா? சாதி வாரி கணக்கெடுப்பு என்பது இன்று நேற்று அல்ல பிரச்சனை அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது.
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தது. ஆனால் அங்கு பெரியார் இயக்கம் இல்லை. தெலுங்கானாவில் எடுக்கப்பட்டனர். ஏன் இவர்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது என அங்கு பெரியாரும் இல்லை. திராவிட அரசும் இல்லை. அதனால் எடுக்கின்றன. திமுக எவ்வளவு பெரிய அயோக்கியர்கள்.
நீ எல்லாவற்றையும் சமூக நீதி, இட ஒதுக்கீடு கற்றுக் கொடுத்திருந்தால் நாங்க ஏன் இவ்வளவு காலம் கழிச்சு பஞ்சமி நிலத்தை மீட்டுத்தா சாதிவாரி கணக்கெடுப்பு எடு என்று கேட்க போறோம்..
கொடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த 69 விழுக்காடு மண்டல் என்கின்ற ஒருத்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு காரணம் நம்முடைய தகப்பன் ஆனமுத்து என்பதை பெருமையோடு சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாநிலமாக பெரிய தலைவர்களை, குடியரசுத் தலைவர்களை பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி ஐயா விபி சிங் வரும்பொழுது அப்போது முதலமைச்சராக இருந்த அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 69 விழுக்காடு ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தி அதனை ஆவணப்படுத்தி சட்டப் பாதுகாப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அதையும் மீறி இவர்கள் எடுக்க மாட்டார்கள் என ஒன்றிய அரசு தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
சாதிவாரி கணப்பு எடுப்புக்கும் சமூக சாதிவாரி கணக்கெடுப்பு சமூகப் பிரனிடுச்சுடுக்கும் நேர் எதிர் கொள்கை சென்னது பாரதிய ஜனதா, காங்கிரஸ். இப்பொழுது சொல்கிறார் நாதுல் காந்தி சாதிவாரி கணக்கெடுக்கும் எடுக்க வேண்டும் என்று.
என் நாடு மக்களும் நாசமாகி பட்டினி பசியா குட்டிச்சுவரா கிடக்கிறதுக்கு காரணம் உன்னுடைய தாத்தாக்கு தாத்தா உன்னுடைய பாட்டி அப்பா அம்மா இப்ப நீங்க. புதுசா வந்த மாதிரி பேசுறீங்க. உலகெங்கிலும் 13 கோடி தமிழ் தேசிய மக்கள் வாழ்ந்த போதிலும் நாங்கள் அடிமையாக இருக்கின்றோம் அந்த உரிமையைப் பெற போராடி பெற வேண்டும். இவர்கள் எடுக்க மாட்டார்கள் எதுனா ஒன்று சொல்லு இந்திய அரசு எங்களுக்கு பணம் தரவில்லை.
மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட உனக்கு வரி தர முடியாது என்று சொல்ல ஒரு துணிச்சல் இல்லை./ வீரம் இல்லை, அது சொல்லு எங்களுக்கு எவ்ளோ நேரம் ஆகும் என்று கூறுகின்றனர். நீ சொல்லி பாரேன் சொன்ன ஒயின் ஷாப்ல ஈடி ரைட் ஒரு லட்சம் கோடி ஊழல் என்று சொன்னார்கள். ஒரு வாரம் கழிச்சு ஓராயிரம் கோடி ஊழல் என்று சொல்லுகின்றனர். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சா 100 கோடி கடைசியா ஒன்னும் இல்ல சரியா தான் இருக்குன்னு சொல்லுவாங்க.
நான் எவன்கிட்டயும் பிச்சை கேட்கல என் இடத்தை எனது உரிமையை கேட்கிறேன். என் உரிமை எங்களுக்கு வேண்டும் வெள்ளைக்காரன் 12 லட்சம் ஏக்கர் நிலத்தை பஞ்சமி நிலத்தை பிரிட்டன் இருந்து கொண்டு வந்து கொடுத்த இடமில்லை என்னுடைய பூர்விக இடத்தை என்னிடமிருந்து எடுத்து திருப்பிக் கொடுத்து விட்டான் வெள்ளைக்காரன். வெள்ளைக்காரன் கொடுத்த நிலத்தை இந்த கொள்ளைக்காரன் (திமுக) எடுத்தான் அதை தடுக்க நாங்கள் கூடி உள்ளோம்.
சமூகம் சரியாக முன்னர் வேண்டுமென்றால் எல்லோரும் சமமாக வளர்ந்து முன்னேற வேண்டும் அதுதான் சமூக முன்னேற்றம், தாழ்ந்தவன் தாழ்ந்து போவான உயர்ந்தவன் உயர்ந்தே போவான் என்றால் அதுவல்ல நாட்டின் வளர்ச்சி. இந்தக் கூட்டத்திலேயே எவன் பறையன் என்று கேட்டால் நான் தான் என்று திமிறி எழு, எந்தச் சொல் என்று உன் மீது சுமத்தப்படுகிறது அந்தச் சொல்லை எடுத்துச் சொல்லாக நீ மாற்றாதவரை உனக்கு விடுதலை இல்லை. செங்கல்பட்டு, தஞ்சாவூர் திருநெல்வேலி போன்ற வளம் கொழிக்கின்ற, செழிப்பாக நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள் எல்லாம் பெரும் பெரும் நிலச் சுரண்டர்கள் இருக்கின்றனர்.
இதில் சிலர் அவர்கள் நிலத்தில் அவர்களே பயிரிட்டு வேலை செய்கின்றனர் ஆனால் பெரும்பாலும் அந்த நேரத்தில் வேலை செய்யும் ஆட்களாக ஆதி தமிழ் கொடி பறையர்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். மனிதனை அடிமையாக வைத்து வேலை வாங்குகின்றனர். 1844ல இந்த அடிமை நிலை மாற்றுவதற்கு பிரிட்டிஷ்காரன் சட்டம் கொண்டு வந்த பிறகும் இந்த நிலை மாறவில்லை, ஏனென்றால் நமது மக்களின் உளவியல் நிலை மாறவில்லை அப்படி இப்படி கடுமையாக வைத்து வேலை வாங்க கூடாது.
ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நாங்கள் சுதந்திரமாக முடிவு எடுத்து வேலைக்கு செய்கிறோம் என்று கையெழுத்துவிட்டு வேலை செய்கின்றனர் ஏன்னா வறுமை மக்களின் வறுமைக்கு காரணம் நிலம் இன்மை, பொருளாதாரம் இன்மை இதனால் வேளாண்மை பணிகளில் அதிகமாக ஈடுபடும் மக்கள் ஆதி தமிழ் பழங்குடியின மக்கள்.
மக்களுக்கு சத்துள்ள உணவு இல்லை இருக்க இருப்பிடம் இல்லை. நல்ல உடை இல்லை. ஆதி குடிமக்கள் வாழும் இடத்தில் கள்ளு கடை சாராயக்கடை அதிகரித்து வருகிறது. வழிபாட்டு உரிமை கொடுப்பதில்லை பொருளாதார வலிமையோ ஏற்பட வாய்ப்பு கொடுக்கவில்லை. எல்லாத்தையும் செஞ்சு தாழ்த்தி வீசி நசுக்கி பார்க்கின்றனர் ஆதிக்க சமூகத்தினர். எல்லா நோய்க்கும் ஒரே மாத்திரை எல்லாம் சமூகத்திற்கும் ஒரே ஆளு தான் திமுக. பல்லாயிரம் பள்ளிக்கூடம் திறந்து வைத்து படிக்க வைத்தது எங்க தாத்தா காமராஜ் பல்லாயிரம் டாஸ்மாக் கடை திறந்து குடிக்க வச்சது (திமுக) நீயும் உங்க அப்பா உங்க ஆளுங்க?
போதையிலும் பாதையிலும் செல்லாதீர்கள் உங்கள் அப்பா கேட்கிறேன் நன்றாக பேணி பாதுகாத்த உங்க உடம்பை இப்படி நீங்கள் செய்கிறீர்கள். சேலம் தஞ்சாவூர் மாவட்டங்களில் டாஸ்மாக் வியாபாரம் குறைந்துவிட்டதா என்ன விசாரிங்க என்று திமுகவை விமர்சித்த சீமான் நம்பர் ஒன் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆச்சுன்னு சொல்லுவாரு. எதுல நம்பர் ஒன் எந்த தகுதியும் இல்லாத இந்த நிலத்திலே ஒருவர் முதலமைச்சர் ஆகியிருக்கிறார் என்றால் அது நம்பர் ஒன்னு தான்.
ஒரு வீரனை எதிர்த்து அருவாள் கம்பை தூக்கிட்டு வாடான்னா அவதூறு தூக்கிட்டு வரானுங்க பைத்தியக்கார பசங்க. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த ஆண்டு 1891இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 17 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஜேம்ஸ் திரமென் ஹீ தாக்கல் செய்யப்பட்டார். அவர் போராடி வீழ்த்தப்பட்டு தாழ்த்தப்பட்டு கிடைக்கின்ற தமிழ் சொந்தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் தான் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம்.
1892 ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1892 இலிருந்து1933 வரை அந்த நிலம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அதனை பண்ணை முதலாளிகள் 10, 50 வாங்கி கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு கொடுத்தார்கள் . இந்த நிலம் பத்தாண்டுகளுக்கு ஆதி குடிமக்களிடம் தான் இருக்க வேண்டும். அப்படியும் பத்தாண்டுகள் கழித்து விற்கவோ, தானம் செய்யவோ வேண்டும் எனறால் அதை தாழ்த்தப்பட்ட ஆதி குடிமக்களுக்கு தான் தவிர்க்கப்பட வேண்டும். ஆதிக்க தமிழ் குடி மக்களுக்கு விற்பனை செய்ய கூடாது அது சட்டபடி குற்றமானது.
ஆனால் இந்த நிலத்தை மொத்தத்தையும் எடுத்துக் கொண்டவன் ஆதி தமிழ்குடி மக்களை தவிர மத்த குடிமக்கள் தான்.
என்ன செய்துவிட்டது நாம் தமிழர் கட்சி என்று கேட்கலாம். இன்று திமுக ஆட்சியில் இருப்பதற்கு காரணமே நாம் தமிழர் கட்சி தான். 2021 தேர்தலில் 65க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக நாம் தமிழர் இருந்தது. அதிமுக வாக்குகள் 15 ஆயிரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சிக்கு சென்றதால் தான் திமுக வெற்றி பெற்றது. 35 தொகுதிகளில் 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்ததை கவனிக்க வேண்டும். 2026 இல் நான் விடமாட்டேன். என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications