நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தமிழறிஞர் நெல்லை கண்ணன் பேசியது ஆட்சிக்கு எதிரான அறச்சீற்றம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசியதால் நெல்லை கண்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வலியுறுத்தி அவர் வீட்டு முன்பாக பாஜகவினர் 10 பேர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நெல்லை கண்னன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவின் நரேந்திரன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!
நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம்.அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.
— சீமான் (@SeemanOfficial) December 31, 2019
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!
2/2
நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!. இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications