தமிழர்கள் தாக்கப்படும் போது கட்சியில் சேரும் விழாவை நடத்துவதா? ஜெ.வுக்கு சீமான் கண்டனம்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது கட்சியில் புதியதாக சேருபவர்களை வைத்து முதல்வர் ஜெயலலிதா விழா நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டனர். இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிமுகவில் 91,000 பேர் இணையும் விழாவை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று நடத்தியது சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் இப்படி ஒரு விழா தேவைதானா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனிடையே சென்னையில் இன்று காவிரி நீர் உரிமை மீட்புப் பேரணியை நடத்திய சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் அரசின் பாதுகாப்புடன் நின்று தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.

அனைத்துக்குமே கடிதம் எழுதுகிற ஜெயலலிதா அம்மையார், இங்குள்ள கன்னடர்கள் தாக்கப்படும் நிலை உருவாகாதா? என கேள்வி கேட்டு கடிதம் எழுதவில்லையே. கட்சியில் புதியதாக சேருபவர்களை வைத்து விழா நடத்துகிறார் இந்த நேரத்தில்...
ஏன் இந்த சிக்கல் தீர்ந்த பின்னர் விழா நடத்தக் கூடாதா? இந்த பிரச்சனையில் சின்ன அறிக்கையை கூட வெளியிடவில்லையே?
இவ்வாறு சீமான் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications