தமிழை காக்க குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: சீமான் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ‘வென்றாக வேண்டும் தமிழ்' என்ற பொருளில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தி, ஆங்கில மொழி படித்தால் பேரறிஞர்களாகி விடலாம். வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தமிழில் படித்தால் மதிக்கக்கூட மாட்டார்கள் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.
இது மன நோய். பெரியகொடுமை. பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் சங்கம் அமைத்து தமிழ்மொழியை வளர்த்தார்கள். அந்த தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். எழுத்து தமிழாக இருந்தாலும், உச்சரிக்கப்படுவது ஆங்கில மொழி.
நாடு தமிழ்நாடு. ஆனால் தமிழ் இல்லை. நாட்டில் இல்லாத தமிழ் மாநாட்டில் வாழ்ந்து விடுமா? உலகத்தில் எந்த மொழி படித்தாலும் நம் தாய் மொழி படிப்பது இனம் வாழ்வதற்கு. பெயர்களில் கூட தமிழ் இல்லை. அரசு நிறுவனங்களில் கூட தமிழ் இல்லை.
எல்லா கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடக்க வேண்டும். நாம் அனைவரும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம். வீட்டில் கூட ஆங்கில வார்த்தை உச்சரிக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் சீமான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications