For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுக்கு போலீஸைவிட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான்: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

அனைவருக்கும் சுயபாதுகாப்பு அவசியம் என ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்கள் பாதுகாப்பு பற்றி ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பேட்டி

    சென்னை: பெண்களுக்கு முதல் பாதுகாப்பு பெற்றோர்தான் எனவும், அனைவரும் சுயபாதுகாப்பை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி நேற்றிரவு 11 மணிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் இளம் ஒருவர் ஏறினார். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த பெண் சற்று நேரத்தில் அசதி காரணமாக தூங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஸ்டேஷனாக வர, வர பயணிகள் இறங்கி சென்றனர்.

    Self-safety is necessary-I.G.Ponmanikavel

    இதனால் சத்யராஜ் என்ற 25 வயது இளைஞர் மட்டும் இளம்பெண்ணுடன் அந்த ரயில் பெட்டியில் இருந்தார். ஒருவரும் அங்கு இல்லாத தைரியத்தில் சத்யராஜ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். தூக்கத்திலிருந்து விழித்த அந்த பெண் பதறிபோய், அலறி கத்தினார்.

    பக்கத்து பெட்டியில் பயணம் செய்திருந்த ரயில்வே போலீஸ் சிவாஜி என்பவருக்கு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. எனினும் அவரால் உடனடியாக ஓடி செல்ல முடியாமல் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை காத்திருந்து, பிறகு சென்றார். அங்கு பலாத்காரம் செய்ய முயன்றுகொண்டிருந்த அந்த சத்யராஜை பிடித்து, ரயில்வே போலீசில் சிவாஜி ஒப்படைத்தார்.

    எனினும் பலாத்கார அதிர்ச்சியிலிருந்த அந்த பெண் மயக்கடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை ஐ.ஜி.பொன்மாணிக்கநேரில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பேசினார். பெண்களுக்கு போலீஸைவிட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான். அந்த இளம்பெண் இரவு 11 மணி, தனியாக பயணம் செய்துள்ளதுடன், பெண்களுக்கான பெட்டியில் ஏறாமல் பொதுவான பெட்டியில் ஏறியுள்ளார். பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி சாதகமாக பயன்படுத்தி கொண்டான். பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடம் முக்கால்மணி நேரம் விசாரணை நடத்தினேன்.

    பாலியல் தொல்லை கொடுத்த நபரை விட்டுவிடக்கூடாது. தூக்கில் போட வேண்டும். குற்றவாளிக்கு 10 சிறைதண்டனையாவது நிச்சயம் கிடைக்கும். வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற துயரம் நேரக்கூடாது. அனைவரும் முதலில் சுயபாதுகாப்பை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, இளம்பெண்ணை மீட்ட ரயில்வே எஸ்.ஐ. சுப்பையா, காவலர் சிவாஜி ஆகியோரை பாராட்டிய பொன்.மாணிக்கவேல் இருவருக்கும் தலா ரூ.5000 வெகுமதியாகவும் வழங்கினார்.

    English summary
    IG Pon.Manickavel has asked women to be the first guardian of the police and that everyone should protect their self-defense.Earlier, he met a young girl who was sexually harassed last night. Later, he was awarded a reward of Rs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X