காளி தாயே! உன் கோயிலை இடிப்பவன் ரத்தம் கக்கி சாக வேண்டும்.. மிளகாய் பொடி அபிஷேகம் செய்த சாமியாடி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கோயில்லை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு 3 நாள்களில் சமாதி ஆகிவிடுவார்கள் என வேண்டி சாமி சிலைகளுக்கு பெண் சாமியாடி ஒருவர் சாபமிட்டதால் பரபரப்பு எழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளாக காளி கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் அருகே திருநங்கையர்கள் தங்கியுள்ளனர்.
இந்த கோயிலில் பரிகார பூஜை செய்வது, பேய் ஓட்டுவது, செய்வினை எடுப்பது போன்ற பூஜைகளை திருநங்கைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலையில் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு
இதையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலை அரசு அதிகாரிகள் போலீஸார் துணையுடன் சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த திருநங்கைகளிடம் கோயிலை இடிப்பதற்கான உத்தரவை காண்பித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த அவர்கள் கோயிலை இடிக்கக் கூடாது என்றனர்.

கடவுளுக்குத்தானே என வாக்குவாதம்
நீர் நிலைகளை ஆக்கிரமித்து நாங்களா குடியிருக்கிறோம். கடவுளுக்குத்தானே கோயில் அமைத்திருக்கிறோம் என வாதாடினர். அப்போது அங்கு தலையில் ஜடாமுடியுடன் வந்த சாமியாடி பெண் முருகம்மா என்பவர் காளியம்மன் , நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சிலைகள் மீது திடீரென மிளகாய் கொடி கலந்த நீரில் அபிஷேகம் செய்தார்.

ரத்தம் கக்கி சாக வேண்டும்
அப்போது அவர் சாமிகளிடம், "நானா உங்களை தேடி வந்தேன். நீங்கள் தானே என்னை தேடி வந்தீர்கள். கோபத்துடன் வாங்க, வந்து கோயிலை இடிப்பவர்கள் 3 நாட்களில் ரத்தம் கக்கி சுடுகாட்டுக்கு செல்லும் வகையில் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்.

மிளகாய் பொடி தண்ணீரை பூசி கொண்ட சாமியாடி
பின்னர் சாமி சிலைகளுக்கு தெளித்த மிளகாய் பொடி தண்ணீரை தனது முகத்திலும் பூசிக் கொண்டார். அதில் அவரது கண், வாய், மூக்கு என அனைத்து பாகங்களிலும் மிளகாய் பொடி பரவியது. இதனால் அலறிய திருநங்கைகள் ஓடி போய் அந்த மிளகாய்பொடியை துடைத்தனர். மேலும் சிலர் கேன் தண்ணீரை கொண்டு வந்து முருகம்மாள் மீது ஊற்றிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்
அதன்பின் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அப்புறப்படுத்துவதாகவும் அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனினும் அங்கு பாதுகாப்பிற்காக பலத்த போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications