எம்ஜிஆரால் முடிந்தது.. ரஜினியால் முடியுமா என்ன.. எல்லாம் சும்மா.. தெர்மாகோல் செல்லூர் ராஜு விளாசல்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து மக்களிடம் வென்றவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அதே போல் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அம்மா கட்சி எதிர்ப்பு
இதற்கு ஆளும் அதிமுக அம்மா கட்சியின் உள்ள அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர். குறிப்பாக, தம்பிதுரை தமிழகத்தில் சிஸ்டம் சரியாகத்தான் இருக்கிறது என்று பதில் கொடுத்தார்.

எம்ஜிஆர் மட்டுமே..
இதனைத் தொடர்ந்து, தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜுவும் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சை கண்டித்துள்ளார். தமிழகத்தில் நடிகர் ஒருவர் கட்சித் தொடங்கி ஆட்சி அமைத்தார் என்றால் அது எம்ஜிஆர் மட்டுமே என்று கூறியுள்ளார்.

சிவாஜியே தோற்றவர்
அவரைத் தவிர வேறு யாராலும் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஆவேசமாகக் கூறிய செல்லூர் ராஜு, நடிகர் திலகமாக மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்த சிவாஜி கணேசனே கட்சித் தொடங்கி மக்களிடம் தோற்றவர் என்று ஆவேசமாக பேசினார்.

ரஜினி தோற்பார்
அதற்கடுத்த வந்த பாக்கியராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்திரன் என எல்லோருமே கட்சி ஆரம்பித்தார்கள். என்ன ஆனார்கள் என்று தமிழகத்திற்கு தெரியும். அதே போல் தான் நடிகர் ரஜினிகாந்த்தும் தமிழகத்தில் ஒன்றும் இல்லாமல் ஆவர் என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications