சிரிப்பழகன் செல்லூர் ராஜூ! மாஜி அமைச்சர் வளர்மதி சூட்டிய அடைமொழி! அதிமுக விழாவில் குபீர் சிரிப்பலை!
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ''சிரிப்பழகன்'' என்ற புதிய அடைமொழியை சூட்டியுள்ளார் மாஜி அமைச்சர் வளர்மதி.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநாட்டு குழு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, மதுரையில் 3 படைகள் உள்ளதாகவும் அதில் முதல் படை என்னவென்று கேட்டால் ''சிரிப்பழகன் செல்லூர் ராஜூ படை'' என்றும் இரண்டாவது படை ''தளபதி ஆர்.பி.உதயகுமார் படை'' எனவும் புதிய அடைமொழிகளை சூட்டினார்.
மாணவபருவம் முதல் திமுக எதிர்ப்பில் மிக உறுதியாக நின்று வரும் ராஜன் செல்லப்பாவின் படை மூன்றாவது படை எனவும் வளர்மதி பேசினார். இந்த மூன்று படைகளும் அதிமுக எழுச்சி மாநாட்டில் தரக்கூடிய செங்கோலனது ஆட்சி மாற்றத்தை கொண்டுவரக் கூடிய செங்கோலாக அமையும் எனக் கூறினார்.

இதில் ஆர்.பி.உதயகுமாரை பற்றி பேசும் போதோ, ராஜன் செல்லப்பாவை பற்றி பேசும் போதோ கிடைக்காத வரவேற்பும் எழாத சிரிப்பலையும் செல்லூர் ராஜுவை பற்றி பேசும் போதும் மட்டும் குபீர் சிரிப்பலை கிளம்பியது. ஏற்கனவே வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் விட்டது முதல் தெர்மோகோல் ராஜூ என செல்லூர் ராஜூவை பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இப்போது சிரிப்பழகன் என்ற புதிய அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பதால் இனி அந்தப் பெயரிலும் அவரை சமூக வலைதளங்களில் கலாய்ப்பார்கள் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications