மாடு பிடிபட்டது.. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டார் எங்க மதுரைக்காரர்.. கலாய்த்த செல்லூர் ராஜூ!
மதுரை : திமுக அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் 30,000 கோடி ரூபாய் விவகாரம் தான். உண்மையைச் சொல்லி மதுரைக்காரர் மாட்டிக் கொண்டார். மாடு பிடிபட்டது. அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி விட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் என்பதற்காக ஒரு சாதாரண இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் 30,000 கோடி ரூபாய் விவகாரம் தான். தவளை தன் வாயால் கெடும். அதுபோல உண்மையைச் சொல்லி மதுரைக்காரர் மாட்டிக் கொண்டார்.
மாடு பிடிபட்டது, மதுரை பழனிவேல் தியாகராஜன் பிடிபட்டு விட்டார். அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி விட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் என்பதற்காக ஒரு சாதாரண இலாகாவுக்கு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இளம் அமைச்சரான மனோ தங்கராஜ் வைத்திருந்த இலாகாவை பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது அதிகப்படியான கோபம் உள்ளது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கும், சபரீசனுக்கும் பழனிவேல் தியாகராஜன் மீது கடுமையான கோபம் உள்ளது என்பது அமைச்சரவை மாற்றத்தில் தெரிகிறது, இதுதான் உண்மை.
நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதித் துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜூ.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications