Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வமகள் சேமிப்பு திட்டம்..என்னாது, ரூ.50 செலுத்தினால், இத்தனை லட்சம் ரிட்டனா? மத்திய அரசு அசத்துதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி உங்கள் சேமிப்பை தொடங்குவது தெரியுமா? ரூ. 50 செலுத்தி எதிர்காலத்தில் ரூ. 8 லட்சம் வரை ரிட்டன் பெற முடியும் என்கிறார்கள்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான், செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டமாகும்..

மெச்சூரிட்டி பணம்: உங்கள் பெண் குழந்தை வளர்ந்தபிறகு, அவருக்கான கல்வி, தொழில், திருமணம் போன்ற தேவைகளுக்கு இப்போதே சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகச்சிறந்த வழிமுறையாகும். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தையும் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்துவர வேண்டும். 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பணம் கிடைக்கும்.

Selvamagal Semippu thittam and how to create a corpus of over 11 lakh rupees with 2000 rs monthly deposit

இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்... ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.

சேமிப்பு திட்டம்: உங்கள் மகள் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்கி மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். ஆக வருடத்துக்கு மொத்தம் 24,000 ரூபாய் முதலீடு செய்கிறோம். 15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாயாகும்.. இப்போது, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதத்தில் 21 வருடங்கள் கழித்து மெச்சூரிட்டியின்போது மொத்த ரூபாய் 11,16,815 கிடைக்கும். அதாவது, வட்டி வாயிலாக மட்டுமே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.. இப்போது, அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்தபட்சமாக ரூ. 50 செலுத்தியும் உங்களது சேமிப்பை தொடங்கலாம்... இதனால், ரூ. 8 லட்சம் வரை எதிர்காலத்தில் ரிட்டன் பெற முடியும்..

சபாஷ் திட்டம்: அதே போல செல்வமகள் திட்டத்தில் மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் 8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.16 லட்சம் கிடைக்கும்... இந்த திட்டத்தில், உங்களுக்கு குழந்தைக்கு 18 வயது ஆகும் போது பாதித்தொகையை நீங்கள் பெற்று கொள்ளலாம். மீதித்தொகை பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் போது பெற்று கொள்ளும் வசதியும் உண்டு...

இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலைகளை செய்கின்றன. அதனால், அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். இது தவிர பொதுத்துறை வங்கிகளான SBI, போன்ற வங்கிகளின் இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் என்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பு இந்த திட்டத்துக்கு கிடைத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+