மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறேன்.. அன்புமணிக்கு செங்கோட்டையன் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறேன் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கி ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.

Sengottaiyan answers to Anbumani

இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர், பள்ளிக் கல்வித் துறையில் வெளிப்படைத் தன்மையுடனும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டும் செயல்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற சென்னை வட்டார பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் என்ற தலைப்பில் சொற்பொழிவு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School Education Minister Sengottaiyan has answered to Anbumani Ramdoss over education department issue.
Please Wait while comments are loading...