2 குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, எஸ்கேப்பான நடிகை நிலானி.. திடீர் பிரஸ் மீட்
Recommended Video

சென்னை: உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை, திருமணம் செய்துவிட்டு அவர் மீதே போலீசில் புகார் அளித்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சின்னத்திரை நடிகை நிலானி காலை முதல் தலைமறைவாகிய நிலையில் மீண்டும் வந்து மாலையில் பிரஸ் மீட் செய்தார்.
சீரியல் நடிகை நிலானி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது போலீஸ் யூனிபார்மில் போலீஸை விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவானார் நிலானி. பின்னர் குன்னூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

விசாரணை
இந்த நிலையில், தன்னை திருமணம் செய்ய லலித்குமார் என்ற உதவி இயக்குநர் தொல்லை தருவதாக சமீபத்தில் நிலானி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரிடமும் போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து வீடு திரும்பிய லலித்குமார், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

லலித்குமார் தற்கொலை
நிலானி தன்னை காதலித்து விட்டு அவமரியாதை செய்துவிட்டதால் லலித்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனிடையே லலித்குமார் குடும்பத்தார் அவரது செல்போனில் இருந்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டனர். அதில் இருவருமே நெருக்கமாக இருப்பது தெரியவந்தது.
|
போட்டோ, வீடியோ
செப்டம்பர் 1ம் தேதி நிலானி காலில் மெட்டி அணிவித்து அவரை லலித்குமார் திருமணம் செய்து கொண்டதை போன்ற வீடியோ காட்சிகளும் அதில் உள்ளன. லலித்குமார் தற்கொலை தொடர்பாக நிலானியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வளசரவாக்கத்திலுள்ள அவர் வீட்டுக்கு இன்று போலீசார் சென்று பார்த்தபோது, அவரின் 2 குழந்தைகள் அங்கு இருந்துள்ளன. நிலானியை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

எஸ்கேப்
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, நிலானி மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தவே போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்தனர். நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன அந்த குழந்தைகள்தான் வீட்டில் இருந்தன. ஆனால், விஷயம் பெரிதான நிலையில் மாலையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார் நிலானி. லலித்குமாரை காதலித்தது உண்மைதான் என்றாலும் அவர் குணம் சரியில்லை என குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications