நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார்? கைது செய்யப்பட்ட முருகனிடம் தீவிர விசாரணை
நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகனிடம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பேசி அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் 5 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் முருகனை கைது சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததையடுத்து, இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவரிடம் நேற்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இன்றும் 2வது நாளாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில், மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுடனான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், செல்போன் ஆதாரங்களை வைத்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமியிடம் நடத்தபடும் விசாரணையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications