வெளிமாநில பெண்களை விருந்தாக்கும் புரோக்கர்கள்.. மதுரையில் களைகட்டும் பாலியல் தொழில்.. பகீர் தகவல்
மதுரையில் வாடிக்கையாளர்களின் ஆசையை நிறைவேற்ற வடமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: மதுரையில் வாடிக்கையாளர்களின ஆசைக்காக வடமாநில பெண்களை வைத்து நடத்தப்படும் பாலியல் தொழில் அதிகரித்துள்ளது. இதனை போலீசார் கண்டும் காணாதது போல் நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க அரசு உடடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆடம்பர ஆசை காட்டி பெண்களை சித்ரவதை செய்து பாலியல் தொழிலை நடத்தி வருகின்றனர். மதுரையில் பாலியல் தொழில் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது. வாடகைக்கு வீடுகளை பிடிக்கும் புரோக்கர்கள் அங்கு பாலியல் தொழிலை படுஜோராக நடத்தி வருகின்றனர்.
மதுரை தல்லாகுளம், கரிமேடு, தபால் தந்தி நகர், கடச்சனேந்தல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வடமாநில பெண்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆடம்பர ஆசையில் விழுந்த பெண்கள்
குடும்ப பெண்களை ஆடம்பர ஆசை காட்டி அழைத்து வந்து புரோக்கர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிமாநில பெண்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவம் தற்போது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டுகொள்ளாத போலீசார்
வெளிமாநில பெண்களை ரகசியமாக கடத்தி வந்து இத்தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புரோக்கர்கள் மீண்டும் தொழிலை விரிவுபடுத்தி எண்ணிக்கையை அதிகரித்து செல்வதாக தெரிகிறது.

வாடகை வீடுகளில் தொழில்
மதுரை அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புரோக்கர்கள் வீடுகளை அதிகளவில் வாடகைக்கு எடுத்து தொழிலை செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரங்களில் ஆண்களுக்கு சமமாக மது குடித்துவிட்டு பெண்கள் கும்மாளம் போடுவதை பல முறை கண்டித்து, போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சிக்கி தவிக்கும் பெண்கள்
ஆனால் போலீசார் கட்டிங்பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளமல் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.மதுரையின் பல்வேறு இடங்களில் வெளி மாநில பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மொழி தெரியாமல் தவிக்கும் தங்கள் பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமால் சிக்கி தவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

உடனடி நடவடிக்கை தேவை
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க அரசு உடடின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications