திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க.. 13 வயது சிறுமியை நாசம் செய்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்!

13 வயது சிறுமிக்கு ஓய்வு பெற்ற அதிகாரி பாலியல் தொல்லை தந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த ஒய்வு பெற்ற காவல் அதிகாரி- வீடியோ

    மதுரை: திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க இந்த காமகொடூரர்கள். வயது வித்தியாசம் பாராமல், தகுதி, தராதரம் பார்க்காமல் தினந்தோறும் நடைபெறும் சமூக குற்றம் பாலியல் பலாத்காரமாதான் இருக்கும். பொழுதுவிடிஞ்சு பொழுதுபோனா எத்தனை பெண் குழந்தைகளை சீரழிக்கிறாங்க இந்த காமவெறி பிசாசுகள்! இன்றைக்கும் மதுரை ஆத்திக்குளத்தில் ஒரு கொடூரம்.

    ஆத்திகுளம் பகுதியில் வசித்து வருபவர் திரவியம். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர். இவர்தான் இந்த கருமத்தை செய்திருக்கிறார். இவரது பக்கத்து வீட்டு பெண்ணுக்கு வயது 13. கடைக்கு சென்றுவிட்டு இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் அந்த சிறுமி.

    வீட்டினுள் இழுத்து பலாத்காரம்

    வீட்டினுள் இழுத்து பலாத்காரம்

    இந்த சார்பு ஆய்வாளர் வீட்டை தாண்டிதான் அந்த பெண் தன்னுடைய வீட்டுக்கு செல்ல முடியும். அப்போது சார்பு ஆய்வாளர் வீட்டை தாண்டிபோகும்போது, அந்த சிறுமியை கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய்விட்டார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி. தன் வீட்டினுள் தள்ளி கதவையும் சாத்திவிட்டார். பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட தொடங்கினார்.

    அலறி துடித்த சிறுமி

    அலறி துடித்த சிறுமி

    மிகவும் கீழ்த்தரமான, இழிவான, விவரிக்கவே முடியாத அளவுக்கு அந்த பெண்ணிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி அலறி துடித்தாள். கதவை பூட்டிக்கொண்டு திருட்டுத்தனமான செயலில் ஈடுபட்டால், சிறுமியின் அலறல் அக்கம் பக்கம் வீட்டாரின் காதில் விழுந்தது. பதறியடித்துன் கொண்டு ஓடிவந்த அவர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து பார்த்தபோதுதான் அந்த அதிகாரியின் கோரமுகம் வெளிப்பட்டது.

    சரமாரியாக வெளுத்த மக்கள்

    சரமாரியாக வெளுத்த மக்கள்

    உடனடியாக சிறுமியை மீட்டுக்கொண்டனர். அத்துடன், அந்த அதிகாரியை அங்கேயே சரமாரியாக வெளுத்து கட்டினர். உடனடியாக போலீசுக்கும் தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு டிஎஸ்பியே விரைந்து வந்தார். மிகப்பெரிய தண்டனை தந்தே தீர வேண்டும் என்று ஆத்திரத்துடன், அந்த அதிகாரியை தல்லாகுளம் டிஎஸ்பியிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    வழக்கு பதியப்படுமா?

    வழக்கு பதியப்படுமா?

    கடைசியில் பார்த்தால், அந்த அதிகாரியை கூடவே கூட்டி சென்றுவிட்டார் டிஎஸ்பி. ஆனால், அந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. தன் துறையை சார்ந்த உயரதிகாரி என்பதால் வழக்கு பதியாமல் விட்டுவிடுவார்களா? அல்லது சட்டம் தன் கடமையை செய்யும் பாணியில் தல்லாகுளம் போலீசார் இறங்குவார்களா என இனிதான் தெரியும். ஆனால் ஒரு பாவமும் அறியாத சிறுமி மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+