தனியார் பள்ளிகளுக்கு வாடகைக்கு விடப்படும் மாநகராட்சிப் பள்ளிகள்... எதிர்த்து சைக்கிள் பேரணி!
சென்னை: தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனர். பல பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைத்து வருகின்றனர்.

இதுதவிர பல மாநகராட்சிகளில், மாநகராட்சி பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன. அவற்றை வேறு பள்ளிகளுடன் இணைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

மதுரையில் பிரபலமான அவ்வை மாநகராட்சி மகளிர் பள்ளியை மூடி விட்டு அந்த கட்டடத்தில் தனியார் பள்ளிக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக ஏற்கனவே அங்கு கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை திறக்க வேண்டும், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கைளை அதிகரிக்க வேண்டும், கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) சார்பில் வியாழனன்று 4 நாள் சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.
கோயம்பேடு மாநகரட்சி பள்ளி அருகே தொடங்கிய இந்த 4 நாள் சைக்கிள் பிரச்சார ஊர்வலத்தை கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications