அசிங்கமாக திட்டிய தலைமை ஆசிரியை.. தற்கொலை செய்த பிளஸ் ஒன் மாணவர்.. நடவடிக்கை கோரும் எஸ்.எப்.ஐ.
சென்னை: தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவரை தலைமை ஆசிரியை அசிங்கமாக திட்டியதால் மனம் உடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் பி.உச்சிமாகாளி, மாநில செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஜீவானந்தம் என்பவரை பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜோஸ்வின் பவி மாணவனை அசிங்கமாக திட்டியும், பள்ளியை விட்டு நீக்கிவிடுவேன் எனவும் கூறியதால் மனமுடைந்த மாணவன் தனது வீட்டில் 9.12.14 அன்று மாலை தற்கொலைக்கு முற்பட்டு உடலில் தீவைத்துக்கொண்டார். அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் ஜி.ராஜேஸ் ஆகியோர் நேரில் சென்று 11.12.14 அன்று பார்த்து மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவரின் உடல்நிலை கருதி உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய தேனி அரசு மருத்துவமனை முதல்வருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பேசினார். இந்திய மாணவர் சங்கம் இப்பிரச்சனையில் தலையிட்டது. மாணவனின் தற்கொலை முயற்சிக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
அவனது தந்தை ரவிச்சந்திரன் தனியார் மில்லில் வேலை செய்பவர். தாய் மாரியம்மாள் கூலி வேலைக்கு செல்பவர். எனவே குடும்ப சூழல் கடுமையான நெருக்கடியில் இருந்தது. இந்நிலையில் அவனுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் 21.12.14 அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்ததிற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலையும் வழங்க வேண்டும் என்றும், மாணவனை தற்கொலைக்கு தூண்டிய பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கவில்லையென்று ஒன்றுசேர்ந்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய தலைமை ஆசிரியரோ, மாணவர்களை தவறாக பேசியதால் அதில் மனமுடைந்த மாணவன் சாமுவேல்ராஜ் தற்கொலைக்கு முற்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்புகளில் பயின்று முடித்த மாணவர்களுக்கும், தற்போது பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவில்லையென்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்களும், மாணவர்களும் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கை எதுவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்யப்படவில்லை.
இதனால் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. ஆனால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லையென்று தொடர்ச்சியாக புகார் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications