பணமதிப்பிழப்புக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்ககேடு: ப. சிதம்பரம் கடும் சாடல்
பண மதிப்பிழப்புக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்கக் கேடானது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு யோசனை வழங்கிய ரிசர்வ் வங்கியின் செயல் வெட்க கேடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
பணமதிப்பிழப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று தமது ஆண்டறிக்கையில் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

அதில் சிதம்பரம் கூறியுள்ளதாவது:
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர் மொத்த பணத்தில் 1 விழுக்காடுதான் திரும்பி வந்துள்ளது. 99% பணம் சட்ட ரீதியாக மாற்றப்பட்டுள்ளது.
அப்படியெனில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டதா? என்கிற கேள்வி எழுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு யோசனை சொன்ன ரிசர்வ் வங்கியின் செயல் வெட்கக் கேடானது.
Rs 16000 cr out of demonetised notes of Rs 1544,000 cr did not come back to RBI. That is 1%. Shame on RBI which 'recommended' demonetisation
— P. Chidambaram (@PChidambaram_IN) August 30, 2017
ரிசர்வ் வங்கிக்கு ரூ16,000 கோடி வந்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ21,000 கோடி செலவு செய்துள்ளனர்.
அதாவது 1 சதவீத கருப்பு பண புழக்கத்தைத் தடுக்க ரூ21,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சிதம்பரம் சாடியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications