“ஒழுங்கா முடி வெட்டிட்டு வராத மாணவர்களுக்கு மொட்டை அடிச்சு விடுங்க” - அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "பள்ளி மாணவர்கள் ரவுடி மாதிரி முடி வெட்டிக்கொண்டு வருகிறார். ஒழுங்காக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.

Shave the Heads of Students Who Look Like Rowdies Minister Jegadeeswari s Remarks Spark Controversy

அப்போது, "இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதை பார்த்தால் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள், பள்ளிக்கு போகிறவர்கள் போன்று முடியை வெட்டுவது கிடையாது. சிலர் ரவுடிகள் மாதிரி வெட்டுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் முடி வெட்டுவதை சரி செய்ய வேண்டும். ஒழுங்காக முடி வெட்டியுள்ள மாணவர்களை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள். அதில் தவறே கிடையாது. நம் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இதைச் சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது.

இரண்டாவது விஷயம்.. கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். பெற்றோர் ஏன் இதனை அனுமதிக்கிறீர்கள்? ஏதேனும் பிரச்சனையில் சிக்கி, பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் சென்றால், அங்கே மாணவனின் தோற்றத்தை பார்த்தவுடன் அவரை தவறு செய்தவர் என்று காவலர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள்.

இதில் காவலர்களின் தவறு எதுவும் இல்லை. மாணவரின் தோற்றம்தான் அவர்களை அப்படி உறுதி செய்ய வைக்கிறது. ஒருவரின் தோற்றம் தான் அவரின் குணத்தை நிர்ணயிக்கிறது. மாணவர் தவறு செய்தாரா? இல்லையா? என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகு முடிவாகும். ஆனால், பார்த்தவுடன் அவரின் தோற்றத்தால் தவறான எண்ணம் உருவாகிறது" எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே மொட்டை அடித்துவிடுங்கள் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அமைச்சரின் பேச்சு விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+