திடீர் டான்ஸ்.. இடி முழக்கம். அசரடித்த சிவதாண்டவம்.. பக்கத்தில் போய் பார்த்தால்!
சத்குரு ஒளி லாயம் பீடத்தில் வெளிநாட்டினர் சிவதாண்டவம் ஆடினார்கள்.
Recommended Video

சீர்காழி: நம்ம ஊர் பெருமையும், கலாச்சாரமும் நம்மளை விட வெளிநாட்டுக்காரங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்கு போல.
சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் சத்குரு ஒளி லாயம் பீடம் ஒன்று இருக்கிறது. இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோயிலும் உள்ளது. இந்த கோயிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக பவுர்ணமிகளில் உலக நன்மை வேண்டிசிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

சீன காதலர்கள்
இந்த சிறப்பு பூஜைகளை நாடி ராஜேந்திரா சுவாமிகள் நடத்தி வருகிறார். அங்கு வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீபத்தில்கூட சீன காதலர்கள் இரண்டு பேர் இந்த கோயிலை சுற்றி பார்த்துவிட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்து போய் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டிக் கொண்டு போனார்கள். அந்த அளவுக்கு வெளிநாட்டினரை ஈர்த்து வருகிறது.

வெளிநாட்டவர்
இந்நிலையில் கோயிலுக்குள் திடீர் டான்ஸ் சத்தம் கேட்டது. இடியென முழங்கும் சத்தத்துடன் சிவதாண்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்று பார்த்தால், அவர்கள் நம்ம ஊர் ஆட்கள் இல்லை. வெளிநாட்டு முகங்கள்தான்!!

சிவதாண்டவ நடனம்
அமெரிக்கா, ஹாலந்து, சீனா, பிலிப்பைன்ஸ் என பல்வேறு நாட்டினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்துதான் இந்த சிவதாண்டவத்தை ஆடி கொண்டிருந்தனர். பல்வேறு நாட்டிலிருந்து ஒளிலாயம் வந்த இவர்கள் முன்னதாக, விநாயகர், சிவன், சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் செய்தார்கள். அதன்பிறகுதான் அனைவரும் சிவன் சன்னதி முன்பு சிவதாண்டவ நடனம் ஆடினார்கள்.

குவிகிறது வாழ்த்துக்கள்
பட்டையும், கொட்டையும், உடல் முழுவதும் பட்டை பட்டையாக திருநீரும், என பக்தி மயமாக காட்சியளித்த இவர்களை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பரவசத்தில் மூழ்கி போனார்கள். மேலும் பொதுமக்களும் திரண்டு வந்து இந்த வெளிநாட்டினர் ஆடிய சிவதாண்டவத்தை பார்த்து ரசித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அள்ளி தெளித்தார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications