தவெக மாநாட்டில் விஜய்க்கு ஷோபாவும் எஸ்.ஏ.சந்திரசேகரும் அளிக்க போகும் சர்பிரைஸ் கிப்ட் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வருகை தரும் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் தாய் ஷோபாவும் ஒரு பரிசை கொடுக்க போவதாக சொல்லப்படுகிறது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நடிகர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும் மக்களும் வருகை தருகிறார்கள்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இந்த மாநாட்டில் வைத்துதான் விஜய் தனது கட்சியின் கொள்கையை அறிவிக்கப் போகிறார். அதை வைத்துதான் அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார் என்பது தெரியவரும். இந்த சுமார் 85 ஏக்கர் மாநாட்டு திடலில் மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகிகளான வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

அது போல் தமிழன்னையின் கட் அவுட்டும் இருந்தது. இந்த மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் நேற்று முன் தினம் நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக தொழிலாளர்கள் இதை நிறுவினார்கள். இந்த கம்பத்தில் 20 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட கொடி இன்று ஏற்றப்படுகிறது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இந்த கொடியை விஜய் இன்று மாலை ஏற்றுகிறார். பிறகு அவர் மாநாட்டு மேடைக்கு வருகை தருகிறார். இந்த மேடையில் விஜய், தனது கட்சியின் கொள்கை, கொடி குறித்தும் விளக்குகிறார். அவர் ஆளும் கட்சி குறித்தும் ஊழல் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் அதிகம் பேர் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இயங்குவதற்கு தற்காலிக செல்போன் டவர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. விக்கிரவாண்டி வி சாலை மாநாட்டு திடல் பார்க்கவே பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

மேலும் மாநாட்டு மேடையை சுற்றியுள்ள ஹோட்டல்களில் அறைகள் எல்லாம் புக்காவிட்டன. விக்கிரவாண்டி முதல் வி.சாலை கிராமத்தில் மாநாடு நடைபெறும் பாதையில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டுக்கு விஜய்யின் பெற்றோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாடு வெற்றியடைய வேண்டும் என சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் ஷோபாவும் சந்திரசேகரும் சிறப்பு பூஜை செய்தனர். தவெக கொடியுடன் கூடிய மாலை , சாய்பாபாவுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதி விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். பெரிய நிலைமைக்கு அவர் வர வேண்டும் என்றார். இந்த நிலையில் ஷோபாவும் எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்க்கு ஒரு சர்பிரைஸ் பரிசை விஜய்க்கு மாநாட்டு மேடையில் வைத்துக் கொடுக்க போகிறார்களாம். அது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சாய்பாபாவுக்கு அணிவித்த தவெக மாலையை விஜய்க்கு அணிவிக்கவுள்ளார்களாம்.

மாநாட்டில் கலந்து கொள்ள விஜய் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு வந்துவிட்டார். அங்கு அவர் வாடகை வீட்டில் தங்குகிறார். அவர் அந்த வீட்டிலிருந்து மாநாட்டுக்கு வர கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அது போல் பொதுமக்களுக்கு சிற்றுண்டி தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+