ஹெல்மெட் வாங்க படையெடுத்த மக்கள் கூட்டம்.. 3 மடங்கு விலை வைத்து கல்லா கட்டிய கடைக்காரர்கள்..
சென்னை: ஹெல்மெட் வாங்க குவிந்த கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், மூன்று மடங்கு விலை வைத்து தரமில்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்தனர். தமிழகம் முழுவதும் இதே காட்சிகளைக் காண முடிந்தது.
தமிழகத்தில், இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று ஹெல்மெட் விற்பனை சக்கை போடு போட்டது. கடந்த மே மாதம் வரை, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஹெல்மெட் தற்போது, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், தரமில்லாத பல ஹெல்மெட்டுகள் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் விலைக்கு தள்ளிவிடப்பட்டன.
சாலையோரம் மற்றும் ஆங்காங்கே உள்ள கடைகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஹெல்மெட் விற்பனை நடந்து வருகிறது. இன்று முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதால், வாகன ஓட்டிகள் பலர் நேற்று ஹெல்மெட் கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

இதை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், மூன்று மடங்கு கூடுதல் விலை வைத்து ஹெல்மெட்டுகளை விற்பனை செய்தனர். இதுதவிர ஐ.எஸ்.ஐ., தரமில்லாத ஹெல்மெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன.
வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு கப்பம் கட்டுவதை விட, தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்கி செல்வோம் என்ற நினைப்பில், 500 ரூபாய் கூட பெறாத ஹெல்மெட்டுகளை, 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications