தமிழக சட்டசபை நாளை கூடுகிறது! காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்?
சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. இக்கூட்டத் தொடரில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டசபை நாளை கூடியதும் மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பிறகு அன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு நாளை மறுநாள் காலை மீண்டும் சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்படும்.

சட்டசபையின் அலுவல் ஆய்வு நாளை கூடி சட்ட சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த கூட்டத் தொடரின் போது 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர். அவர்களது சஸ்பென்ட் காலம் முடிந்ததால் நாளைய சட்டசபை கூட்டத் தொடரில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications