Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு

மிகவும் நேர்மையான அதிகாரியான சகாயம் ஐஏஎஸ் அரசியல்லுக்கு வரவேண்டுமா, கூடாதா என்று ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்டபோது பலரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் நேர்மையான அதிகாரியான சகாயம் ஐஏஎஸ் அரசியல்லுக்கு வரவேண்டுமா, கூடாதா என்று ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்டபோது பலரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் சிலர் மோசமான பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த படுகொலை பெரிய மன வருத்தத்தை கொடுத்ததாக, சகாயம் ஐஏஎஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே மக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அவரது இந்த வீடியோவிற்கு பின் இந்த விருப்பம் அதிகரித்துள்ளது.

அரசியலுக்கு வர வேண்டும்

அரசியலுக்கு வர வேண்டும்

பெருமளவிலான வாசகர்கள் ''சகாயம் உடனே அரசியலுக்கு வர வேண்டும்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 21.73% பேர் சகாயம் உடனே அரசியலுக்கு வர வேண்டும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

 வரக் கூடாது வரக் கூடாது

வரக் கூடாது வரக் கூடாது

அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 6.1% பேர் இந்த விஷயத்தை எதிர்த்து இருக்கிறார்கள். இல்லை, சகாயம் அரசியலுக்கு வரக் கூடாது என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

வேண்டும்

வேண்டும்

சிலர் இந்த விஷயம் பற்றி வேறு விதத்தில் வாக்களித்துள்ளார்கள். அதன்படி சகாயம் போன்றோர் களமிறங்கினால்தான் தமிழகம் தப்பும் என்று 20.53% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

விட மாட்டார்கள்

விட மாட்டார்கள்

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 18.37% பேர் இந்த விஷயத்திற்கு புதிய கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவரை வர விட மாட்டார்கள் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

அவசியம்

அவசியம்

சில வாசகர்கள் ''சகாயம் தலைமையில் நல்லவர்கள் அணி திரள வேண்டியது அவசியம்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 17.78% பேர் சகாயம் தலைமையில் நல்லவர்கள் அணி திரள வேண்டியது அவசியம் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

அதிகாரியாக இருக்க வேண்டும்

அதிகாரியாக இருக்க வேண்டும்

சில வாசகர்கள் ''அதிகாரியாக இருந்து அவர் மக்களுக்காக போராட வேண்டும்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 15.48% பேர் சகாயம் அதிகாரியாக இருந்து அவர் மக்களுக்காக போராட வேண்டும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+