நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது.. சித்தார்த் காட்டம்!

நாம் உண்ணும் உணவில் இன்னும் அதிகமான உப்பபை சேர்த்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அது குறித்து நடிகர் சித்தார்த் டிவிட்டரில் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.

Siddhart blasts on sasikala

இதனிடையே நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகர்கள் கமல், சூர்யா, அரவிந்த் சாமி உள்பட பலர் ஆவேசமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது என்று தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில், ஜெயிலில் சசிகலாவுக்கு ஒரு லேப்டாப் கொடுங்கள். 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பலுக்கும் 4 ஆண்டுகளுக்குப் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்துங்கள். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+